/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கர்நாடகா மதுபாட்டில் கடத்திய 4 பேர் கைது
/
கர்நாடகா மதுபாட்டில் கடத்திய 4 பேர் கைது
ADDED : ஜூலை 08, 2025 09:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கர்நாடகா மாநில மதுபாட்டில்களை காரில் கடத்திய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட 'ஷிப்ட்' காரை சோதனையிட்டனர்.
அதில், கர்நாடகா மாநிலத்தில் விற்கப்படும், ஆறு மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அஸ்லாம், 48, சுல்தான், 42, சாதிக் பாஷா, 38, சவுகத் அலி, 36, ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.