/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'ரீல்ஸ்' மோகத்தில் வாலிபரை வெட்டிய 4 சிறுவர்கள் கைது
/
'ரீல்ஸ்' மோகத்தில் வாலிபரை வெட்டிய 4 சிறுவர்கள் கைது
'ரீல்ஸ்' மோகத்தில் வாலிபரை வெட்டிய 4 சிறுவர்கள் கைது
'ரீல்ஸ்' மோகத்தில் வாலிபரை வெட்டிய 4 சிறுவர்கள் கைது
ADDED : டிச 29, 2025 06:57 AM
திருத்தணி: திருத்தணியில் கஞ்சா போதையில் 'ரீல்ஸ்' எடுப்பதற்கு வடமாநில வாலிபர் ஒருவரை அரிவாளால் வெட்டிய நான்கு பேரை கைது செய்தனர்.
திருத்தணி ரயில்நிலைய குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் நான்கு பேர், வடமாநில வாலிபர் ஒருவரை நேற்று முன்தினம் கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரை திருத்தணி போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயடைந்தவர் மகாராஷ்டிராவை சேர்ந்த சுராஜ் 30 என, தெரிந்தது.
இந்நிலையில் நேற்று, சுராஜ்யை நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் கத்தியால் வெட்டும் காட்சி சமூக வலை தளத்தில் பரவியது. ரீல்ஸ் மோகத்தில் வெட்டியது தெரிந்தது.
இதையடுத்து திருத்தணி போலீசார், திருத்தணி தாலுகாவை சேர்ந்த இரு சிறுவர்கள், அரக்கோணம் தாலுகாவை சேர்ந்த இரு சிறுவர்கள் என, 17 வயதுள்ள நான்கு சிறுவர்களை கைது செய்தனர். கைதான சிறுவர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

