/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 1.85 லட்சம் வாக்காளர்களுக்கு... நோட்டீஸ்; 2002 - 05 பட்டியலுடன் பொருந்தவில்லையாம்!
/
திருவள்ளூரில் 1.85 லட்சம் வாக்காளர்களுக்கு... நோட்டீஸ்; 2002 - 05 பட்டியலுடன் பொருந்தவில்லையாம்!
திருவள்ளூரில் 1.85 லட்சம் வாக்காளர்களுக்கு... நோட்டீஸ்; 2002 - 05 பட்டியலுடன் பொருந்தவில்லையாம்!
திருவள்ளூரில் 1.85 லட்சம் வாக்காளர்களுக்கு... நோட்டீஸ்; 2002 - 05 பட்டியலுடன் பொருந்தவில்லையாம்!
ADDED : டிச 29, 2025 06:41 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து 6 லட்சத்து 19,777 பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்தில் பெறப்பட்ட படிவங்களில், 1.85 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விபரங்கள், 2002--05ம் ஆண்டு பட்டியலுடன் தொடர்பு இல்லாமல் உள்ளது, என, அவர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ள ஆவணங்களில் ஒன்றான இருப்பிட சான்றிதழை பெற்று வரும் ஜன., 25ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், நவ.4ம் தேதி துவங்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், 35,82,226 வாக்காளர்களுக்கு, 3,699 ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்கள், கடந்த, 14ம் தேதி வரை கணக்கெடுப்பு படிவத்தை வழங்கினர்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை திரும்ப பெற்று, கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது.
இதில், விசாரணையின் அடிப்படையில், கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து வராத 1 லட்சத்து 35,220 படிவங்கள் இறந்து போனவர்களாகவும், 1,53,642 படிவங்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்காதவர்களாகவும், 3 லட்சத்து 9,376 படிவங்கள் நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்களாகவும், 20,437 படிவங்கள் இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்களாகவும் மற்றும் 1,102 மற்றவைகளாகவும் உள்ளதாக ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
பொருந்தவில்லை மொத்தம், 6 லட்சத்து 19,777 பேர் நீக்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் 29 லட்சத்து 62, 449 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோர், வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து திருவள்ளூருக்கு நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வரும், ஜன.18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணியின் போது, பூர்த்தி செய்யப்பட்ட படிவம் பெறப்பட்டவர்களில், 1 லட்சத்து 85 ஆயிரத்து 987 பேரின் விபரங்கள், கடந்த, 2002-05ம் ஆண்டு பட்டியலுடன் பொருந்தவில்லை.
மேலும், பெறப்பட்ட விண்ணப்பங்களில் முன்னர் உள்ள விபரங்கள் தப்பும், தவறுமாக இருந்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் அனைவருக்கும், மாவட்ட தேர்தல் அலுவலகம், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ள, 13 ஆவணங்களில் ஒன்றை சம்பந்தப்பட்ட ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்களிடம், வரும் ஜன.18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
நடவடிக்கை இந்நிலையில், வாக்காளர் அளிக்க வேண்டிய 13 ஆவணங்களில், இருப்பிட சான்றிதழும் ஒன்று. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வருவோர், இருப்பிட சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, வருவாய் துறை செயலர் அமுதா, கலெக்டருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
இதில், வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்து பெறப்பட்ட படிவத்தில், 1 லட்சத்து 85,987 பேரின் விபரம் கடந்த, 2002-05ம் ஆண்டு வெளியிடப்பட்ட, தீவிர வாக்கா ளர் திருத்த பட்டியலுடன் பொருந்தி வரவில்லை.
எனவே, அவர்கள் அனைவரும், தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்யும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
அதன்படி, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ள, 13 ஆவணங்களில் ஒன்றான, இருப்பிட சான்றிதழ் வழங்க வேண்டி உள்ளது.
தற்போது, 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே, மேற்படி சான்றிதழ் வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது. இதன்படி, முதலில் விண்ணப்பித்தோருக்கு முன்னுரிமை வழங்கப் படுவதால், இருப்பிட சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படும்.
எனவே இருப்பிட சான்றிதழ் இலவசமாக பெறுவதற்கு 'ஆப்லைனில்' வழிவகை செய்யப்பட்டுள்ளது. வரும் 2026 ஜன., 25 வரை பெறலாம்
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

