ADDED : செப் 22, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர மாநில அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த தேவி, 31, ராணி, 55, மாலா, 32, வியாசர்பாடி யுவராஜ், 46, ஆகியோரிடம், எட்டு கிலோ குட்கா பறிமுதல் செய்து நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.