/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செங்கல் சூளையில் 4 மாத குழந்தை மூச்சு திணறி பலி
/
செங்கல் சூளையில் 4 மாத குழந்தை மூச்சு திணறி பலி
ADDED : ஜன 18, 2025 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஒடிசா மாநிலம், பாலாங்கீர் மாவட்டம், தேம்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் கன்குசரன்போகி. இவர், குடும்பத்துடன், திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலக்கொண்டையூர் கிராமத்தில் செங்கல் சூளையில் தங்கி பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம், தன் நான்கு மாத ஆண் குழந்தை ரோஷன் போகிக்கு, மூச்சு திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினர். வெங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.