ADDED : பிப் 16, 2025 09:03 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தாசில்தார் மற்றும் தனி தாசில்தார்கள் பல்வேறு நிர்வாக நலன் கருதி நேற்று முன்தினம், கலெக்டர் பிரதாப் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், திருத்தணி தாசில்தாராக பணியாற்றி வந்த மலர்விழி, பள்ளிப்பட்டு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி மாநெல்லுார் சிப்காட் அலுவலகம் அலகு - 2, தனி தாசில்தாராக பணியாற்றி வந்த நடராஜன், திருத்தணி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதே போல, கும்மிடிப்பூண்டி மாநெல்லுார் சிப்காட் அலுவலகம் அலகு - 1, தனி தாசில்தாராக பணியாற்றி வந்த சரண்யா, திருவள்ளூர் கோட்ட கலால் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும், திருவள்ளூர் கோட்ட கலால் அலுவலராக பணியாற்றி வந்த உமாசங்கரி, கும்மிடிப்பூண்டி மாநெல்லுார் சிப்காட் அலுவலகம் அலகு - 1, தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
திருவள்ளூர் கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரதாப், முதன் முதலாக அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.