/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு
/
தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு
தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு
தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு
ADDED : ஆக 19, 2025 11:01 PM
திருத்தணி:தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது குழந்தை, மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சசிகலா. இவர்களது மகன் ஜோகித், 4.
குழந்தைக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டது. பெற்றோர் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, காய்ச்சல் குறைவதற்காக மருத்துவர் மாத்திரை வழங்கினார். அதன்பின், வீடு திரும்பினர்.
இரவு 8:00 மணிக்கு சசிகலா, பாதியளவு மாத்திரையை குழந்தைக்கு கொடுத்துள்ளார். மாத்திரை தொண்டையில் சிக்கி, குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டது. பதற்றமடைந்த பெற்றோர், குழந்தையை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.