/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டூ-விலரில் கடத்தி வந்த 40 கிலோ குட்கா பறிமுதல்
/
டூ-விலரில் கடத்தி வந்த 40 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : அக் 02, 2024 02:31 AM
திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள், திருத்தணி வழியாக அரக்கோணத்திற்கு கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, திருத்தணி புதிய பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 'ஸ்பிளன்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின்படி, எஸ்.ஐ., குமார் நிறுத்தி சோதனை செய்தார். வாகனத்தில் ஒரு பையில், 40 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 25,000 ரூபாய்.
விசாரணையில், அரக்கோணம் அடுத்த வளர்புரத்தைச் சேர்ந்த பாலு, 44, என்றும், சித்துார் மாவட்டம் புத்துார் பகுதியில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. திருத்தணி போலீசார் பாலுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.