/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 40 கிலோ குட்கா பறிமுதல்
/
ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 40 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : அக் 17, 2024 10:51 PM
திருவாலங்காடு:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன் 40.
இவர் ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் உள்ள ஒரு கடைக்கு டி.வி.எஸ்., ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பொருட்களை கொண்டு செல்வதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ள சின்னம்மாபேட்டையில், ரயில்வே கேட் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த டி.வி.எஸ்., ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது ஹான்ஸ் 24 கிலோ, கூல்லிப் 6 கிலோ, சிவ்கத் பாக்கு 10 கிலோ, என மொத்தம் 40 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் மதிப்பு 60,000 ரூபாய். குட்கா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் நீலகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.