/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் 400 அ.தி.மு.க.,வினர் கைது
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் 400 அ.தி.மு.க.,வினர் கைது
ADDED : டிச 31, 2024 01:20 AM
திருவள்ளூர், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற, 400 அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலை மாணவி ஒருவர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதைக் கண்டித்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நேற்று, டோல்கேட்அருகில் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்த நிலையில், மேற்கு மாவட்ட செயலர் ரமணா தலைமையில், முன்னாள் எம்.பி.,க்கள் அரி, வேணுகோபால் உள்ளிட்டஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், போலீசார் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் உட்பட, 220 பேரை கைது செய்து வேனில் ஏற்றி, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பொன்னேரியில்...
அ.தி.மு.க., திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர் சிறுணியம் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரியில் நடந்தது. இதில், ஏராளமான அ.தி.மு.க, தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்று, தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில், 12 பெண்கள் உட்பட 180 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.