/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 400 கன அடி உபரி நீர் திறப்பு
/
பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 400 கன அடி உபரி நீர் திறப்பு
பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 400 கன அடி உபரி நீர் திறப்பு
பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 400 கன அடி உபரி நீர் திறப்பு
ADDED : நவ 25, 2025 03:14 AM
ஊத்துக்கோட்டை: முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், பிச்சாட்டூர் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணி ஆற்றின் நடுவே, ஏரி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 1.81 டி.எம்.சி., நீர்மட்டம் 31 அடி. மழைநீர் முக்கிய நீராதாரம்.
வடகிழக்கு பருவ மழையால், ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டது. நீர்மட்டம், 'கிடுகிடு'வென உயர்ந்து, முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மா லை 6:00 மணிக்கு, வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது ஏரியில் 1.796 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம் 30.6 அடி. மழைநீர் வினாடிக்கு, 300 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. மழைநீரின் வரத்தை பொறுத்து, நீர் வெளியேற்றம் இருக்கும் என, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.