/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 367 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 367 மனுக்கள் ஏற்பு
ADDED : நவ 25, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த மக்கள், நிலம் சம்பந்தமாக 103, சமூக பாதுகாப்பு திட்டம் 52, வேலைவாய்ப்பு வேண்டி 65, பசுமைவீடு, அடிப்படை வசதி கோரி 58 மற்றும் இதர துறை 89 என, மொத்தம் 367 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், துணை கலெக்டர் பாலமுருகன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, ஆதிதிராவிடர் நல அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

