/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட மரங்களுக்கு பதில் 400 கன்றுகள் நடவு

ADDED : ஆக 11, 2025 11:05 PM

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரி இடையே சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக, 400 மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே, 24 கி.மீ., மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இருவழிச்சாலையாக உள்ள இந்த வழித்தடத்தில், தினமும், 15,௦௦௦த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
பெருகி வரும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக, ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் இருந்து பெரிஞ்சேரி வரை, 2.6 கி.மீ., நான்குவழிச் சாலையாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது. 20 கோடி ரூபாய் மதிப்பில், 30 மீட்டர் அகலத்தில், மைய தடுப்புடன் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 50க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன.
அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக, ஊத்துக்கோட்டை - பெரிஞ்சேரி வரை, சாலையின் இரு பக்கமும் 400 மரக்கன்றுகள் நடப்பட்டன.