/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏரியில் மீன் பிடிக்க சென்ற 4ம் வகுப்பு மாணவி பலி
/
ஏரியில் மீன் பிடிக்க சென்ற 4ம் வகுப்பு மாணவி பலி
ADDED : ஆக 01, 2025 10:20 PM
வேப்பம்பட்டு:வேப்பம்பட்டு ஏரியில் மீன்பிடிக்க சென்ற நான்காம் வகுப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, சுந்தர்பாபு நகரைச் சேர்ந்தவர் ஜெர்மின் சுந்தர் மகள் ஜெர்மின் எமல்டா, 9.
இவர், நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில், வீட்டருகே வசிக்கும் நான்கு பேருடன் வேப்பம்பட்டு ஏரியில் மீன்பிடிக்க சென்றார். அப்போது, ஜெர்மின் எமல்டாவும், ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவனும் ஏரியில் தவறி விழுந்தனர்.
ஏரி அருகே விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்கள், இருவரையும் மீட்டு, பெருமாள்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜெர்மின் எமல்டா, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி, செவ்வாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.