/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது
/
போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது
ADDED : ஆக 26, 2025 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:போதை மாத்திரை விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத் திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் சென்னை அண்ணாசாலையை சேர்ந்த பிரேம்குமார், 37, சைதாப்பேட்டை சீனிவாசன், 32, பார்டர் தோட்டம் விக்னேஷ், 24, கண்ணகி நகர் கவுதம், 24, வீரா, 32 என தெரிந்தது.
அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த டைடால் எனும், 2,015 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஐந்து பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.