/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி., பீர் தொழிற்சாலை கொள்ளை வழக்கில் 5பேர் கைது
/
கும்மிடி., பீர் தொழிற்சாலை கொள்ளை வழக்கில் 5பேர் கைது
கும்மிடி., பீர் தொழிற்சாலை கொள்ளை வழக்கில் 5பேர் கைது
கும்மிடி., பீர் தொழிற்சாலை கொள்ளை வழக்கில் 5பேர் கைது
ADDED : மே 22, 2025 10:24 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பில்லாகுப்பம் கிராமத்தில், தனியார் பீர் தொழிற்சாலை ஒன்று கடந்த ஆறு ஆண்டுகளாக பூட்டி இருந்தது.
கடந்த, 19ம் தேதி நள்ளிரவு, மர்ம கும்பல் ஒன்று, தொழிலற்சாலைக்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த காவலாளியை தனி அறையில் அடைத்து வைத்து பூட்டினர்.
பின், தொழிற்சாலைக்குள் இருந்த இயந்திரம், இரும்பு பொருட்களை கிரேன் உதவியுடன் லாரிகளில் ஏற்றி கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியை சேர்ந்த குமரகுருபரன், 35, சாமிரெட்டிகண்டிகையை சேர்ந்த ஆனந்தராஜ், 35, கும்மிடிப்பூண்டி பெரியார் நகரை சேர்ந்த நடராஜன், 30, ஏடூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன், 34, பொன்னேரியை சேர்ந்த ரமேஷ், 27, ஆகியோர் ஈடுபட்டது தெரிந்தது.
நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தொழிற்சாலையில் திருடிய பொருட்கள், ஒரு கிரேன், இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.