/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொள்ளை அடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது
/
கொள்ளை அடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது
ADDED : டிச 07, 2024 09:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு போலீசார், நேற்று, பொதட்டூர்பேட்டை கூட்டு சாலையில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை மேற்கொண்டதில், அதில், கடப்பாரை மற்றும் இரும்பு கம்பிகளுடன் இருந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த விவேக், 30, முகம்மது, 22, மணிகண்டன், 29, பெருமாள் ராஜா, 41, அண்ணாதுரை, 29 என தெரியவந்தது. இவர்கள், கொள்ளை அடிக்க திட்டமிட்டு பள்ளிப்பட்டு பகுதியில் சுற்றி வந்ததும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.