ADDED : அக் 09, 2025 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அருகே, பனைமரத்தில் இருந்த குளவிகள் திடீரென பறந்து வந்து, பள்ளி மாணவன் உட்பட ஐந்து பேரை கொட்டியது.
திருத்தணி ஒன்றியம், அலமேலுமங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது வள்ளுவர்பேட்டை கிராமம். இந்த கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.
நேற்று காலை, சாலையோரம் இருந்த பனைமரத்தில் இருந்து திடீரென, 'குளவி'கள் பள்ளிக்கு படையெடுத்தன.
முதல் வகுப்பு மாணவன் தமிழரசன், 6, உட்பட, அப்பகுதியில் வந்த ஐந்து பேரை 'குளவி' கொட்டியது.
இதில் படுகாயமடைந்த ஐந்து பேர், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.