/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துார் ஒன்றியத்தில் 5 நிவாரண முகாம்கள்
/
கடம்பத்துார் ஒன்றியத்தில் 5 நிவாரண முகாம்கள்
ADDED : டிச 01, 2024 08:46 PM
கடம்பத்துார்:பெஞ்சல் புயலால் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடம்பத்துார் ஒன்றியத்தில், கடம்பத்துார், கொட்டூர், பிஞ்சிவாக்கம், அதிகத்துார், திருமணிக்குப்பம் ஆகிய ஊராட்சியில் அரசு பள்ளிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முகாம்களில் 65 ஆண்கள், 69 பெண்கள் 66 குழந்தைகள் என மொத்தம் 200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பாய், போர்வை, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் வழங்கி வருகின்றனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ முகாம்களும் நடந்து வருகிறது.
மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி கடம்பத்துார் பி.டி.ஓ., க்கள் மணிசேகர், செல்வக்குமார் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கண்காணிப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
* ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கோபாலபுரம் இருளர் காலனியில் வசித்துவரும் மூன்று குடும்பத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குடிசை வீடுகள் புயல் மழைக்கு தாக்குபிடிக்காது என்பதால், வருவாய் தறையினர் சிறப்பு முகாமை ஏற்பாடு செய்து அங்கு, மூன்று குடும்பங்களை சேர்ந்த 14 பேரை தங்க வைத்துள்ளனர்.
இவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் ஏற்பாடுகளை, ஆ்.கே.பேட்டை வட்டாட்சியர் பாரதி, வருவாய் ஆய்வாளர் கனிமொழி, வி.ஏ.ஓ., வேலு உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.