/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பீரோவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு
/
பீரோவை உடைத்து 5 சவரன் நகை திருட்டு
ADDED : அக் 02, 2024 08:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சி, மசூதி தெருவைச் சேர்ந்தவர் முரளி, 32; கூலித்தொழிலாளி. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர், நேற்று முன்தினம் மணவூரில் உள்ள மாமியர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டு, நேற்று மாலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, 5 சவரன் நகை, 200 கிராம் கொலுசு திருடப்பட்டது தெரியவந்தது. திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.