/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பனப்பாக்கம் கால்வாய் துார்வாராததால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின

ADDED : அக் 24, 2024 01:24 AM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 350 ஏக்கர் பரப்பில் சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையால் நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது.
விவசாய நிலங்களுக்கு அருகில், பனப்பாக்கம் மேய்க்கால் பகுதியில் இருந்து பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரிக்கு செல்லும் கால்வாய், பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது.
இதனால், விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற வழியின்றி உள்ளது. ஒரு வாரமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி இருப்பதால், நெற்பயிர்கள் அழுகும் நிலைக்கு சென்றுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது, 50 ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கால்வாய் இருந்தும் பயனில்லாத நிலையில், ஒவ்வொர் ஆண்டு மழையின்போது, விவசாயம் பாதிப்பதாக விவசாயிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, கால்வாயை துார்வாரி, விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர் உடனுக்குடன் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.