/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்
/
மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்
மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்
மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி 50 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்
ADDED : நவ 17, 2024 01:20 AM
சென்னை,சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த தடத்தில் கூடுதலாக 50 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தாம்பரம் ரயில் நிலையத்தில், இன்று காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.
இதனால், வழக்கமான ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு, கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
எனவே, இந்த தடத்தில் செல்லும் பயணியரின் வசதிக்காக கூடுதலாக, தாம்பரத்தில் இருந்து பல்லாவரத்துக்கு - 10; தி.நகருக்கு - 20, பிராட்வேக்கு 20 என, 50 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளன.
பயணியர் அதிகரிக்கும்போது, தேவைக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பேருந்து நிலையங்களில் நேர காப்பாளர்களை நியமித்து, பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ் சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம் ஊராட்சி.
போளிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள இலுப்பூர், வலசை வெட்டிக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மேல்நல்லாத்துார், மணவாளநகர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.
மேலும் 200க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் பணி நிமித்தமாக திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார் சென்று வருகின்றனர்.
இந்த நெடுஞ்சாலை வழியே குறைவான பேருந்துகள் இயக்கத்தால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இயங்காததால் மாணவ, மாணவியர் பள்ளி, கல்லுாரி செல்லும் நேரங்களில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.