/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.கே.பேட்டையில் 50 தொழிலாளர்கள் மயக்கம்
/
ஆர்.கே.பேட்டையில் 50 தொழிலாளர்கள் மயக்கம்
ADDED : பிப் 08, 2024 11:30 PM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த வேலன்கண்டிகையில், தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 1,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது, பெண் தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது சிலர், வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். உடன், அந்த நிறுவன வாகனங்களில், வங்கனுார் மற்றும் பீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று அனுமதிக்கப்பட்டனர். தொழிலாளர்கள் வெளியேற்றபட்டு, நிறுவனம் பூட்டப்பட்டது.
வங்கனுார், பீரகுப்பம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிலர், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். ஒன்பது பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருத்தணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

