சாலை மறியலில் ஈடுபட்ட 51 மாற்றுத்திறனாளிகள் கைது
சாலை மறியலில் ஈடுபட்ட 51 மாற்றுத்திறனாளிகள் கைது
ADDED : ஜூலை 02, 2026 02:22 AM

அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: சாலை மறியலில் ஈடுபட்ட, 51 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய திட்டத்தை கைவிட்டு, பழையபடி 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தக்கோரி, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில், கறுப்பு பேட்ஜ் அணிந்து, கருப்பு கொடியுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் நடந்த மறியலுக்கு, மாவட்ட தலைவர் நடேசன் தலைமை வகித்தார்.
இதில், மத்திய அரசு திட்டத்தின் நகல் எரிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட, 16 பெண்கள் உட்பட, 51 பேர் கைது செய்யப்பட்டனர்.
