/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொங்கல் பண்டிகைக்கு 51,500 பேருக்கு வேட்டி சேலை
/
பொங்கல் பண்டிகைக்கு 51,500 பேருக்கு வேட்டி சேலை
ADDED : ஜன 04, 2024 09:48 PM
திருத்தணி:திருத்தணி தாலுகாவில் மொத்தம், 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், 64 ஆயிரத்தி, 67 குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை ஒட்டி, அரசு சார்பில் தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் வேட்டி, சேலை மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில், பொங்கல் பண்டிகைக்கு, வேட்டி, சேலை வழங்குவதற்காக ஆரம்ப கட்ட பணி துவங்கியுள்ளது.
இதுகுறித்து, திருத்தணி தாசில்தார் மதன் கூறியதாவது:
பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டில், 51 ஆயிரத்தி, 500 ரேஷன் கார்டுகளுக்கு வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப் படுகிறது.
தற்போது. ரேஷன் கடைகளுக்கு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து ஆட்டோ மற்றும் வேன்கள் மூலம் வேட்டி, சேலைகள் அனுப்பி வருகிறோம். வரும், 10ம் தேதிக்கு மேல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.