/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 550 கன அடி நீர் வரத்து
/
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 550 கன அடி நீர் வரத்து
ADDED : செப் 17, 2025 01:59 AM
ஊத்துக்கோட்டை:பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு, 550 கன அடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, கண்டலேறு அணையில் இருந்து சாய்கங்கை கால்வாய் வாயிலாக கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட் வழியே பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு, 550 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி., யில் 2.423 டி.எம்.சி., நீர் உள்ளது. மொத்த நீர்மட்டம், 35 அடி. தற்போது, 32.66 அடி. அங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக, வினாடிக்கு தலா, 200 கன அடி வீதம் புழல், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களுக்கு சென்று கொண்டு இருக்கிறது.