/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
6 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது
/
6 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது
ADDED : அக் 11, 2024 01:22 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் நகர் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவில் அருகே, கையில் பையுடன் சந்தேகம் ஏற்படும் படி இருவர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விசாரித்த போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர்களை சோதனையிட்டனர். அவர்களிடம், 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள், ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசலு, 50, சென்னை, திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், 53, என்பது தெரியவந்தது.
வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்த வெங்கடேசலு, அதை ஸ்ரீதரிடம் வழங்க கும்மிடிப்பூண்டி வந்தது தெரியவந்தது.