/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் கதவை உடைத்து 6 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து 6 சவரன் நகை திருட்டு
ADDED : ஆக 22, 2025 02:14 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் அருகே வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற நபர்கள், 6 சவரன் நகைகளை திருடி சென்றது குறித்து போலீசார், விசாரித்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் பகுதியைச் சேரந்தவர் ரெங்கராஜன், 63. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி லோகா, 56.
நேற்று முன்தினம் இரவு லோகா அணிந்து இருந்த 6 சவரன் நகையை மேஜையில் கழற்றி வைத்தார். தம்பதி இருவரும் உறங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து இருவர் வீட்டின் உள்ளே வந்துள்ளனர். சத்தம் கேட்ட தம்பதி எழுந்து பார்த்த போது, அவர்கள், மேஜை மீது இருந்த நகையை எடுத்து தப்பியோடினர்.
இதுகுறித்து ரெங்கராஜன் அளித்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.