/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் தெரு நாய் கடித்து 6 வயது சிறுவன் பலத்த காயம்
/
திருவள்ளூரில் தெரு நாய் கடித்து 6 வயது சிறுவன் பலத்த காயம்
திருவள்ளூரில் தெரு நாய் கடித்து 6 வயது சிறுவன் பலத்த காயம்
திருவள்ளூரில் தெரு நாய் கடித்து 6 வயது சிறுவன் பலத்த காயம்
ADDED : ஆக 29, 2025 12:22 AM

திருவள்ளூர், திருவள்ளூரில் கடைக்கு சென்ற, 6 வயது சிறுவனை தெரு நாய் கடித்ததில், பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் ரகு மகன் நிஷாந்த், 6. நேற்று காலை நிஷாந்த், வீட்டின் அருகே உள்ள கடைக்கு தின்பண்டங்கள் வாங்க தெருவில் நடந்து சென்றார். அப்போது, திடீரென தெருநாய் ஒன்று, சிறுவனை துரத்தி சென்று, கை, கால், தொடை உள்ளிட்ட பகுதிகளில் கடித்து குதறியது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியாக சென்றோர் நாயை விரட்டினர். இதில், சிறுவனின் உடலில், ஏழு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, நேற்று முன்தினம் அதே தெருவில் நடந்து சென்ற ஒரு மூதாட்டியையும் தெருநாய் கடித்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும், பூங்கா நகர் பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்துள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்தும், நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என, பூங்கா நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.