/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாரில் மது விற்பனை 60 பாட்டில்கள் பறிமுதல்
/
பாரில் மது விற்பனை 60 பாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஜன 08, 2024 11:13 PM
திருவள்ளூர்: திருவள்ளூர், பெரியகுப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள மதுபான கூடத்தில்திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உத்தரவுபடி, நேற்று காலை 9:45 மணிக்கு ஏ.எஸ்.பி., விவேகானந்தா சுக்லா மேற்பார்வையில் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் தனிப்படையினர் மதுபான கூடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த 60 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விற்பனையில் ஈடுபட்டிருந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா சிறுவாணி கிராமத்தைச் சேர்ந்த முருகன், 31 மற்றும் விஸ்வநாதன், 31 ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.