/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை சேகரிப்பு 60 வாகனங்கள் துவக்கி வைப்பு
/
குப்பை சேகரிப்பு 60 வாகனங்கள் துவக்கி வைப்பு
ADDED : டிச 09, 2024 04:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி மாநகராட்சி பகுதிகளில், திடக்கழிவு அள்ளும் வாகனங்கள், அடிக்கடி பழுதாகின.
இதனால், குப்பை அள்ளும் பணியில் தடை ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து, மாநகராட்சி சார்பில், 6 கோடி ரூபாய் மதிப்பில், 40 இலகு ரக வாகனங்கள், 20 கனரக வாகனங்கள் என மொத்தம் 60 வாகனங்கள், குப்பை சேகரிப்பு பணிக்காக வாங்கப்பட்டன.
இந்த வாகனங்களின் துாய்மை பணியை, அமைச்சர் நாசர், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.