/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
600 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.29,000 அபராதம் விதிப்பு
/
600 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.29,000 அபராதம் விதிப்பு
600 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.29,000 அபராதம் விதிப்பு
600 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.29,000 அபராதம் விதிப்பு
ADDED : செப் 28, 2024 01:28 AM

திருவள்ளூர்,:திருவள்ளூர் நகராட்சியில், விற்பனைக்காக வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருள் பறிமுதல் செய்து, 29,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சியில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும், பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. தடையை மீறி சிலர் பிளாஸ்டிக் பை, டம்ளர்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என, கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டிருந்தார்.
திருவள்ளூர் நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன், கமிஷனர் திருநாவுக்கரசு உத்தரவின்படி, சுகாதார அலுவலர் மோகன் மற்றும் சுகாதார துறையினர் நேற்று, திருவள்ளூர் நகரில் அதிரடி சோதனை நடத்தினர்.
திருவள்ளூர் பஜார் வீதியில், மொத்த கொள்முதல் நிலையமாக செயல்பட்ட கடையில் சோதனையிட்ட சுகாதார துறையினர், பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்ட, 600 கிலோ தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, கடை உரிமையாளருக்கு, 29,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என, கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.