/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
600 போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவர் கைது
/
600 போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவர் கைது
ADDED : அக் 29, 2025 11:58 PM
கும்மிடிப்பூண்டி: ரயிலில் போதை மாத்திரைகளை கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய பகுதியில், நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, சந்தேகம் படும்படி இரு இளைஞர்கள் சுற்றித் திரிந்தனர்.
அவர்களை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அவர்களின் உடமைகளை சோதனையிட்டதில், 600 போதை மாத்திரைகள் சிக்கியது.
விசாரணையில், சென்னை சிந்தாதரிப்பேட்டையைச் சேர்ந்த மணிமாறன், 26, சுதேஷ், 20, என்பதும், மும்பையில் இருந்து மாத்திரைகள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், ஒரு மாத்திரை 7 ரூபாய்க்கு மும்பையில் வாங்கி, தமிழகத்தில் ஒரு மாத்திரை, 100 - 200 ரூபாய் வரை விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.
இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

