/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமண பதிவுக்கு ரூ.600 லஞ்சம் ஓய்வு ஊழியருக்கு ஓராண்டு சிறை
/
திருமண பதிவுக்கு ரூ.600 லஞ்சம் ஓய்வு ஊழியருக்கு ஓராண்டு சிறை
திருமண பதிவுக்கு ரூ.600 லஞ்சம் ஓய்வு ஊழியருக்கு ஓராண்டு சிறை
திருமண பதிவுக்கு ரூ.600 லஞ்சம் ஓய்வு ஊழியருக்கு ஓராண்டு சிறை
ADDED : மார் 04, 2024 06:40 AM
சென்னை: திருமண பதிவுக்கு, 600 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், ராயப்பேட்டை சார் - பதிவாளர் அலுவலக ஓய்வுபெற்ற பெண் இளநிலை உதவியாளருக்கு, ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜு. இவர், அப்பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியராக உள்ளார். கடந்த 2019 மார்ச் 6ம் தேதி, கிறிஸ்துவ திருமணத்தை பதிவு செய்யக் கோரி, ராயப்பேட்டையில் உள்ள மத்திய சென்னை மாவட்ட சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த அலுவலக இளநிலை உதவி யாளர் ஜெயலட்சுமி திலகம், 55, 'லஞ்சமாக 600 ரூபாய் வழங்கினால் தான் திருமண பதிவு செய்ய முடியும்' எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜு, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அறிவுரையின்படி, பாதிரியார் லஞ்ச பணத்தை கொடுத்த போது, அதைப் பெற்ற ஜெயலட்சுமி திலகத்தை, போலீசார் கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். இதனால், பணி ஓய்வுபெறும் நாளுக்கு முன், அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.மணிமேகலை முன் நடந்தது. போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குற்றம்சாட்டப்பட்ட நபர், 'எனக்கு தற்போது 70 வயதாகிறது; ஆறு அறுவை சிகிச்சை செய்துள்ளேன்; புகார் அளித்தவரிடம் லஞ்சம் கேட்கவில்லை. இந்த வழக்கால், தன்னை பணி ஓய்வுபெற அனுமதிக்கவில்லை.
கடந்த 14 ஆண்டுகளாக, வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் தடையின்றி ஆஜராகி வருகிறேன்' என தெரிவித்தாலும், குற்றத்தின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப, இந்த தண்டனை விதிக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.

