/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாயுமானவர் திட்டத்தில் 61,541 முதியோர் பயன்
/
தாயுமானவர் திட்டத்தில் 61,541 முதியோர் பயன்
ADDED : நவ 28, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், தாயுமானவர் திட்டத்தில், 61,541 முதியோர் பயனடைந்து வருகின்றனர்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக, 65 வயதை கடந்தோர், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்தினாளிகள் என, 61,541 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

