/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாராயணபுரம் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் 'திக் திக்'
/
நாராயணபுரம் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் 'திக் திக்'
நாராயணபுரம் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் 'திக் திக்'
நாராயணபுரம் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் 'திக் திக்'
ADDED : நவ 28, 2025 03:24 AM

திருவாலங்காடு: நாராயணபுரம் கூட்டுச்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.
திருவள்ளூர் -- அரக்கோணம் நெடுஞ்சாலை, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையுடன் நாராயணபுரம் கூட்ரோடில் இணைகிறது.
இச்சாலை வழியாக தினமும் திருவள்ளூர், சென்னை, திருத்தணி, திருப்பதி என பல்வேறு நகரங்களுக்கு 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் இடத்தில் மாநில நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே உயரதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.