ADDED : ஜூலை 19, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று காலை நிலவரப்படி 7.2 செ.மீ., மழை பதிவாகியது.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு வாரமாக பகலில் வெயில் கொளுத்தினாலும், மாலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதனால், சாலைகளில் மழைநீர் குளமாக தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக, திருவள்ளூரில் 7.2 செ.மீ., மழை பதிவாகியது.
பலத்த மழை காரணமாக, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் அதை சரிசெய்து, நள்ளிரவு மின் விநியோகம் வழங்கப்பட்டது.