ADDED : மார் 06, 2024 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த போந்துாரில் வடமாநில தொழிலாளர்கள் 15 பேர், 8 குடிசைகளில் வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல், நேற்று காலையில் அனைவரும் வேலைக்கு சென்றனர்.
இந்நிலையில், நேற்று பகல் 11:00 மணிக்கு குடிசையில் தீப்பிடித்தது. ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் குடிசைகள் தீக்கிரையாயின. இதில், உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

