/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டாசு கடைக்கு 80 பேர் விண்ணப்பம்
/
பட்டாசு கடைக்கு 80 பேர் விண்ணப்பம்
ADDED : அக் 22, 2024 08:38 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க, 80 பேர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும், 31ல் கொண்டாடப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க இணையத்தில் விண்ணப்பம் பெறப்பட்டது. இதில், மாவட்டம் முழுதும் 80 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது:
தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பித்தவர்கள், அமைக்கப்பட உள்ள கடைகளை, வருவாய், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு முடிந்ததும், வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை சமர்ப்பித்ததும் அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.