/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 89 சவரன் நகை கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து 89 சவரன் நகை கொள்ளை
ADDED : செப் 26, 2024 10:21 PM
பொதட்டூர்பேட்டை:திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலு, 66. இவர் நேற்று காலை தன் குடும்பத்துடன் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள உறவினரின் ஈமச்சடங்கில் பங்கேற்பதற்காக சென்று உள்ளார். மாலையில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் மலர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின் கைரேகை நிபுணர்கள் வரவைக்கப்பட்டனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணையில், 71 சவரன் நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக தெரியவந்துள்ளது.
* மீஞ்சூர் அடுத்த சீமாவரம் காலனியை சேர்ந்தவர் விநாயகம், 42; ஆட்டோ டிரைவர். நேற்று காலை, விநாயகம் மனைவி சாந்தி, நுாறுநாள் வேலைக்கு சென்றுவிட்டார்.
காலை, 11:00 மணிக்கு, விநாயகமும் வீட்டை பூட்டிக்கொண்டு, ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு சென்று விட்டார். பகல், 12:00 மணிக்கு, சாந்தி நுாறுநாள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த, 18 சவரன் நகை திருடுபோயிருப்பது தெரிந்தது.
இது குறித்து சாந்தி, 42, மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்படி குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
வீட்டின் பூட்டை உடைத்து, 18 சவரன் நகையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.