/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டியில் வினாடிக்கு 9,500 கன அடி பிச்சாட்டூரில் 400 கன அடி நீர் திறப்பு
/
பூண்டியில் வினாடிக்கு 9,500 கன அடி பிச்சாட்டூரில் 400 கன அடி நீர் திறப்பு
பூண்டியில் வினாடிக்கு 9,500 கன அடி பிச்சாட்டூரில் 400 கன அடி நீர் திறப்பு
பூண்டியில் வினாடிக்கு 9,500 கன அடி பிச்சாட்டூரில் 400 கன அடி நீர் திறப்பு
ADDED : அக் 25, 2025 02:29 AM

ஊத்துக்கோட்டை: கொசஸ்தலை ஆற்றின் நடுவே, பூண்டி கிராமத்தில் சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் உள்ளது. மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து ஆகியவற்றால் நீர்மட்டம், 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது.
இதன் மொத்த கொள்ளளவு 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 அடி.
பூண்டி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால், கடந்த 15ம் தேதி மதகு வழியே வினாடிக்கு, 700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
பின், படிப்படியாக அதிகரித்து, நான்கு மதகுகள் வழியே வினாடிக்கு 4,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக நேற்று, வினாடிக்கு 9,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, நீர்த்தேக்கத்தில் 32.93 அடி நீர் உள்ளது.
கொள்ளளவு, 2.5 டி.எம்.சி., கிருஷ்ணாபுரம் அணை மற்றும் மழைநீர் வினாடிக்கு, 7,180, கிருஷ்ணா நீர் 400 கன அடி என, மொத்தம் 7,580 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இணைப்பு கால்வாய் வழியே, 300 கன அடி நீர் செம்பரம்பாக்கத்திற்கு செல்கிறது.
பிச்சாட்டூர் ஏரி திறப்பு பிச்சாட்டூர் ஏரியின் மொத்த கொள்ளளவு, 1.853 டி.எம்.சி., நீர்மட்டம் 31 அடி. ஏரியின் வெள்ள நீர் வழிகாட்டுதல்படி, ஏரியில், 28 அடி நீரை இருப்பு வைக்கலாம்.
தற்போது, 28.5 அடி உள்ளதால், நேற்று முன்தினம் இரவு, 11:40 மணிக்கு நான்கு மதகுகளில், இரண்டு திறக்கப்பட்டு வினாடிக்கு, 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரியில், 1.512 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 28.50 அடி. மழைநீர் வினாடிக்கு, 602 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

