/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
9500 கிலோ பட்டாசு குப்பை திருவள்ளூரில் அகற்றம்
/
9500 கிலோ பட்டாசு குப்பை திருவள்ளூரில் அகற்றம்
ADDED : நவ 01, 2024 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:நாடு முழுவதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளிலும் இரவு முதல் நேற்று நள்ளிரவு வரை பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதானல், பட்டாசுகள் குப்பையாக குவிந்தன.
இதையடுத்து நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு உத்தரவுப்படி, சுகாதார அலுவலர் மோகன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பட்டாசு குப்பையை தனியாக பிரித்து அகற்றினர்.
இதில், நேற்று முன்தினம் 3,500 கிலோ, நேற்று 6,000 கிலோ என, இரு நாட்களில் மொத்தம் 9500 கிலோ பட்டாசு குப்பை அகற்றப்பட்டதாக சுகாதார அலுவலர் மோகன் தெரிவித்தார்.