/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் 9.6 செ.மீட்டர் மழை
/
திருத்தணியில் 9.6 செ.மீட்டர் மழை
ADDED : மே 22, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, மாவட்டம் முழுதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் குளமாக பெருக்கெடுத்து ஓடியது.
இதனால், மாவட்டத்தில் கோடை வெப்பம் தணிந்து, குளிர்ந்த தட்பவெப்ப சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக திருத்தணியில், 9.6 செ.மீ., மழை பதிவாகியது.