ADDED : செப் 12, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமழிசை:திருமழிசை பேரூராட்சியில் நடந்த, உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், 977 மனுக்கள் ஏற்கப்பட்டன.
திருமழிசை பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறு வார்டுகளுக்கு, உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், அங்குள்ள சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது.
திருமழிசை பேரூராட்சி பொறுப்பு செயல் அலுவலர் சதீஷ், பேரூராட்சி தலைவர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த முகாமில், 610 மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் உட்பட, மொத்தம் 977 மனுக்கள் பெறப்பட்டன.