/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை குவியலில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
/
குப்பை குவியலில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
ADDED : ஜன 02, 2024 11:11 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பஜார் பகுதியில், ஐ.ஓ.பி., வங்கி கிளை அருகே குப்பை கொட்டும் இடம் உள்ளது.
நேற்று காலை, பிளாஸ்டிக் கவர் சுற்றியபடி, பிறந்த பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ரத்த கறைகளுடன் குப்பைக்கு மத்தியில் கிடந்தது. அதை கண்ட அப்பகுதியினர் பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் குழந்தையை மீட்டு மாதர்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட குழந்தை, மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனை அனுப்பி வைக்கத்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அந்த குழந்தை உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பையில் வீசி சென்றது யார் என்பது குறித்து, சுற்றியுள்ள மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் வாயிலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.