/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாதம் ரூ.50 லட்சம் குட்கா விற்ற பெங்களூரு வியாபாரி சிக்கினார்
/
மாதம் ரூ.50 லட்சம் குட்கா விற்ற பெங்களூரு வியாபாரி சிக்கினார்
மாதம் ரூ.50 லட்சம் குட்கா விற்ற பெங்களூரு வியாபாரி சிக்கினார்
மாதம் ரூ.50 லட்சம் குட்கா விற்ற பெங்களூரு வியாபாரி சிக்கினார்
ADDED : ஜன 22, 2024 01:36 AM

புழல்:புழல் போலீசார், கடந்த 17ம் தேதி அதிகாலை புத்தகரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். புத்தகரம் தங்கவேல் நகரில் 'நாகவல்லி ஏஜன்சிஸ்' என்ற கிடங்கில், ஆட்டோ மற்றும் சரக்கு வேனில் இருந்து, சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏற்றப்பட்ட மூட்டைகளை சோதனை செய்தனர்.
அங்கிருந்த, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த குடோனுக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இது தொடர்பாக, புத்தகரம், சிங்கார வேலன் நகர் 3வது தெருவைச் சேர்ந்த, கிடங்கின் உரிமையாளர் கருக்குவேல், 25, எம்.கே.பி., நகரைச் சேர்ந்த அய்யாதுரை, 45, சின்னத்தம்பி, 30, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த், 36, குன்றத்துாரைச் சேர்ந்த ஜெயசீலன், 30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், குட்கா மொத்த வியாபாரி பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து, தனிப்படை போலீசார், பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியைச் சேர்ந்த குட்கா மொத்த வியாபாரி அஞ்சுபாபுவை, 55, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், தமிழகத்தில் குட்கா வினியோகம் செய்து வந்த அவர், சென்னையில் மட்டும் மாதந்தோறும், 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதற்காக, போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு, கணிசமான 'மாமூல்' கொடுத்து, அமோகமாக தொழில் செய்து வந்துள்ளார்.
குட்கா வியாபாரத்தால், பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான அவரை, கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.