/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் புகார் மனு போட தாலுகாவில் பெட்டி வைப்பு
/
மக்கள் புகார் மனு போட தாலுகாவில் பெட்டி வைப்பு
ADDED : மார் 20, 2024 09:29 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகாவில், ஊத்துக்கோட்டை பெரியபாளையம், கன்னிகைப்பேர், பென்னலுார்பேட்டை, வேளகாபுரம் ஆகிய ஐந்து பிர்காக்கள் உள்ளன. இதில், 100 வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து வகுப்பு, வருவாய், பட்டா, சிட்டா உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கப்படுகின்றன. ஆனால், தகவல்கள் பெற பொதுமக்கள் தாலுகா அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.
மேலும், ஆதார் அட்டை புதிதாக எடுத்தல், புதுப்பித்தல், திருத்துதல், ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும், மக்கள் தாலுகா அலுவலகம் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், வரும் ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், பொதுமக்கள் தங்கள் தேவைகள் குறித்து, அதிகாரிகளிடம் நேரடியாக மனு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களின் மனுக்களை வழங்க, அலுவலக வளாகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதில் பொதுமக்கள் எடுத்து வரும் மனுக்களை போட வேண்டும்.
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பொதுமக்கள் தங்களின் மனுக்களை இதற்காக வைத்துள்ள பெட்டியில் போட வேண்டும். தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த பின், அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்படும்' என்றார்.

