/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இருமுறை சிறுவனை கடித்த நாய் உரிமையாளர் மீது வழக்கு பதிவு
/
இருமுறை சிறுவனை கடித்த நாய் உரிமையாளர் மீது வழக்கு பதிவு
இருமுறை சிறுவனை கடித்த நாய் உரிமையாளர் மீது வழக்கு பதிவு
இருமுறை சிறுவனை கடித்த நாய் உரிமையாளர் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 18, 2024 07:18 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் பஜார் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன் மகன் விஷ்வா, 9. இவர் கடந்த 12ம் தேதி கடைக்கு சென்ற போது அருகே உள்ள வீட்டில் வசிக்கும் பரமேஸ்வரி என்பவரின் வளர்ப்பு நாய் கடித்தது.
காயமடைந்த விஷ்வா திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 14ம் தேதி வீடு திரும்பினார். அன்று மாலை வெளியில் சென்றவரை துரத்தி சென்ற நாய் இரண்டாவது முறையாக கடித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த விஷ்வாவின் தாய் தேவி நாயின் உரிமையாளர் பரமேஸ்வரியிடம் கேட்டார். அப்போது பரமேஸ்வரி தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தேவி அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.