/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு
ADDED : ஜன 20, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனகம்மாசத்திரம், திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் ஊராட்சி பிராமணர் தெருவை சேர்ந்தவர் சாந்தினி 25. இவர் நேற்று முன்தினம் மாலை தனது சகோதரி மதுமிதாவுடன் இருசக்கர வாகனத்தில் திருத்தணி சென்று விட்டு வீடு திரும்பினார்.
கனகம்மாசத்திரம் ஜங்ஷன் அருகே வந்த போது வழி மறித்த அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் ஆபாசமாக, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
காயமடைந்த இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சாந்தினி அளித்த புகாரில் வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

