/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபருக்கு வெட்டு நான்கு பேருக்கு வலை
/
வாலிபருக்கு வெட்டு நான்கு பேருக்கு வலை
ADDED : மார் 12, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, : கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா, 23. அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 45, என்பவரின் குடும்பத்தினருக்கும் சூர்யா குடும்பத்தினருக்கும் இடையே பல நாட்களாக, வழி தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஆறுமுகம், அவரது மகன் கலையரசு, 19, மற்றொரு 17 வயது மகன், உறவினர் பவுன்குமார் ஆகியோர் சூர்யாவின் வீட்டிற்குள் நுழைந்து தகராறு செய்து கத்தியால் வெட்டினர்.
படுகாயம் அடைந்த சூர்யா, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

